/* */

உயர் கோபுர, சோலார் விளக்குகள் நிறுவதல், கொள்முதல் செய்ய ஊராட்சிகளுக்கு தடை

ஊரக உள்ளாட்சிகளில் எந்த ஒரு நிதியில் இருந்தும் உயர்மின் கோபுர விளக்கு, சோலார் விளக்குகள் மற்றும் சோலார் எல்இடி விளக்குகள் கொள்முதல் செய்தல் மற்றும் நிறுவுதலுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

உயர் கோபுர, சோலார் விளக்குகள் நிறுவதல், கொள்முதல் செய்ய ஊராட்சிகளுக்கு  தடை
X

பைல் படம்.

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி இயக்ககத் துறை இயக்குனர் பிரவீன் நாயர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரக உள்ளாட்சி அமைப்புகள் ஒரு பகுதியை தெருவிளக்கு ஏற்படுத்துகின்றன. அவ்வாறு ஏற்படுத்தப்பட்ட நிறுவப்பட்ட தெருவிளக்குகளை கிராம ஊராட்சிகள் பராமரித்து வருகின்றன.

இந்நிலையில் தெரு மின்விளக்குகள் ஏற்படுத்தி பராமரித்தலும், தெரு மின்விளக்குகள் கொள்முதல் செய்வதிலும் மின்விளக்குகளை தேர்வு செய்வதிலும் பெருத்த அளவில் மாறுபாடுகள் ஏற்படுகிறது.

  • மறு உத்தரவு வரும்வரை மூன்றடுக்கு ஊராட்சிகள் எந்த ஒரு நிதியில் இருந்தும் உயர் கோபுர மின் விளக்குகள், சிறுமீன் கோபுர விளக்குகள் ஒன்றுக்கு மேற்பட்ட விளக்குகள் கொண்ட கம்பிகளுடன் கூடிய தெருவிளக்குகள் அமைத்திட தடை செய்யப்படுகிறது.
  • சோலார் உயர்மின் கோபுர விளக்குகள் அமைப்பதும் முழுவதும் மறு உத்தரவு வரும் வரை தடை செய்யப்படுகிறது.
  • சோலார் எல்இடி விளக்குகள் கம்பங்களும் கொள்முதல் செய்தல் உடனடியாக தடை செய்யப்படுகிறது.

இதனை மீறி கொள்முதல் செய்யும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள், ஊராட்சி பிரதிநிதிகள் மீது விதிமுறைகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் இதுதொடர்பான செலவிடப்படும் தொகை அவர்களிடமிருந்து பிடித்தம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேற்குறிப்பிட்ட அறிவுரைகளை பின்பற்றுமாறு அனைத்து ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளும் அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On: 8 Jan 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  7. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  8. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  9. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  10. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...