/* */

சிலிண்டர் தீ விபத்து: உயிரிழப்பு 7 ஆக உயர்வு

கடந்த 28 ஆம் தேதி தேவர்யம்பாக்கம் சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பல காயங்களுடன் செங்கல்பட்டு மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு அனுமதிக்கபட்டனர்.

HIGHLIGHTS

சிலிண்டர் தீ விபத்து: உயிரிழப்பு 7 ஆக உயர்வு
X

 தேவரியம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற வெடி விபத்து இடத்தினை ஆய்வு மேற்கொண்டு வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி மற்றும் உதவி தீயணைப்பு அலுவலர் சக்திவேல் ( கோப்பு படம்) 

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம் தேவராம்பாக்கம் கிராமத்தில் பஜனை கோயில் தெருவில் சாந்தி அஜய்குமார் என்பவர் பாரத் கேஸ் ஏஜென்சி ஏஎஸ்என் என்ற பெயரில் கேஸ் ஏஜென்சி நடத்தி வந்தார்.

அதே பகுதியில் வீட்டின் பின்புறம் சிலிண்டர் குடோன் அமைத்து வாலாஜாபாத் ஓரகடம் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு வணிக ரீதியிலான சிலிண்டர்கள் விநியோகம் செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி மாலை 6 மணியளவில் வாகனத்திலிருந்து சிலிண்டர்கள் இறக்கி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக உராய்வின் காரணமாக சிலிண்டர் வெடி விபத்து ஏற்பட்டது.

இத்தகவுள் அறிந்து காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் மறைமலைநகர் உள்ளிட்ட பகுதியிலிருந்து 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் நிஷா பிரியதர்ஷினி தலைமையில் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்தில் ஜீவானநந்தம் , ஆமோத்குமார் , பூஜா , குணால் உள்ளிட்ட 12 பேர் பலத்த தீக்காயங்கள் அடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனை தீவிர தீப்புண் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் ஏழு பேர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

தீ விபத்தில் காயம் அடைந்த நபர்களை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேரில் சந்தித்து உயர்தர சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினருக்கு அறிவுரை வழங்கினார். அதேபோல் அவரது உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தினை ஐஜி தேன்மொழி மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம் சுதாகரன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு மேலும் தீ விபத்து நிகழா வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தனர்.

தீ விபத்து மறுநாள் பாரத் கேஸ் ஏஜென்சியின் சென்னை நிர்வாக அலுவலக விற்பனை மேலாளர் மற்றும் வணிக மேலாளர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு சிலிண்டர்களை அப்புறப்படுத்தும் பணிகளுக்கான ஆய்வு மேற்கொண்டனர்.

இதேபோல் காவல்துறையை சேர்ந்த தடைய அறிவியல் துறை இணை இயக்குனர் செந்தில்குமரன் ஆய்வு மேற்கொண்டு தீ விபத்து குறித்து விசாரணை செய்தனர்.

மறுநாள் அதிகாலை 2 மணி அளவில் அனைத்து சிலிண்டர்களும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டு வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி மற்றும் வட்டாட்சியர் லோகநாதன் தலைமையிலான வருவாய் துறை குழுவினர் குடோனுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

சிகிச்சை பலனின்றி முதலில் ஆமோத்குமார் உயிரிழந்தார். இதன் மறுநாள் ஜீவானந்தம் மற்றும் அவரது மகள் சந்தியா ஆகியோர் உயிரிழந்தனர். நேற்று குணால் உயிரிழந்த நிலையில் இன்று கிஷோர் மற்றும் சண்முகப்பிரியன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

இதனுடன் இத் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.

தீ விபத்து தொடர்பாக ஓரகடம் காவல்துறையினர் தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் மற்றும் முகவர் சாந்தி அஜய்குமார் உள்ளிட்ட ஐந்து பேர்களின் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

வழக்கு பதிவு செய்தவர்களில் இதுவரை இருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

Updated On: 3 Oct 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  4. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  5. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  7. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
  8. தொண்டாமுத்தூர்
    வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறல் காரணமாக பக்தர் உயிரிழப்பு
  9. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  10. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...