/* */

காஞ்சிபுரம் குப்பைக் கிடங்கை சுத்தப்படுத்தி 8 ஏக்கரை மீட்கும் பணி

காஞ்சிபுரம் அருகே குப்பைக் கிடங்கை சுத்தம் படுத்தி, 8 ஏக்கர் நிலத்தை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதை கலெக்டர் ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் குப்பைக் கிடங்கை சுத்தப்படுத்தி  8 ஏக்கரை மீட்கும் பணி
X

நத்தப்பேட்டை குப்பைக்கிடங்கை பார்வையிட்டு அங்கு பணியாற்றுவோரிடம் குறைகளை கேட்டறிந்தார் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி.உடன் நகராட்சி ஆணையர் எஸ்.லெட்சுமி

காஞ்சிபுரம் நகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும் தினசரி சேகரிக்கபடும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு நத்தப்பேட்டை கிராமத்தில் உள்ள பசுமை உரக்கிடங்கில் 5 மெ.டன் அளவு கொண்ட மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து இயற்கை உரமாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

திடக்கழிவில் 8 ஏக்கர் நிலப்பரப்பில் குப்பைகள் சேகரிக்கப் பட்டிருந்த இடத்தை பார்வையிட்டும், இயற்கை உரம் தயாரிப்பதையும் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி ஆய்வு செய்தார்.

அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களிடம் கழிப்பறை வசதி, இட வசதி, குடும்ப அட்டை , ஆதார் அட்டை,வங்கிக் கணக்கு எண் ஆகியன உள்ளதா எனவும் குழந்தைகள் எவ்வாறு கல்வி கற்கின்றனர் எனவும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

நத்தப்பேட்டையில் உள்ள 8 ஏக்கர் பரப்பில் உள்ள குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தி நிலத்தை மீட்டு அங்கு பூங்கா அமைக்கவும் ஆட்சியர் நகராட்சி அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

ஆட்சியரது ஆய்வின் போது நகராட்சி ஆணையர் எஸ்.லெட்சுமி,பொறியாளர் ஆனந்த ஜோதி, சுகாதார ஆய்வாளர் ரமேஷ்குமார் ஆகியோரும் உடன் இருந்தனர்

Updated On: 23 July 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை