/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவக்கம்

காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் 20 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று துவக்கி வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவக்கம்
X

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் பட்டாளதெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் உணவு அருந்திய மாணவ மாணவிகள்

தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் 20 துவக்கப் பள்ளிகளில் இத் திட்டம் இன்று காலை துவக்கப்பட்டது.

சின்ன காஞ்சிபுரம் பட்டாளத் தெருவில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளியில் பயிலும் 119 மாணவ மாணவிகளுக்கு இனிப்புடன் கூடிய காலை உணவினை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் , மாவட்ட ஆட்சியர் மா. ஆர்த்தி , காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் குமரகுருநாதன் ஆகியோர் வழங்கி துவக்கி வைத்தனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி மேற்பார்வையில் உணவு தயாரிக்கப்பட்டு 20 பள்ளிகளில் பயிலும் 1580 மாணவர்களுக்கு இன்று முதல் காலை உணவு வழங்கப்படுகிறது. உணவு தயாரிப்புக்காக ஒரு மாணவருக்கு 12 ரூபாய் 50 காசுகள் அரசு சார்பில் வழங்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி , மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், காஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் மலர்கொடி குமார் , மாநகராட்சி ஆணையர் கண்ணன், மாமன்ற உறுப்பினர் சந்துரு, கமலக்கண்ணன், சுரேஷ், குமரன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் பட்டாளதெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் உணவு அருந்திய மாணவ மாணவிகள்.

Updated On: 16 Sep 2022 4:58 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  2. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  3. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  5. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  6. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  7. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  8. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  9. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  10. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...