/* */

டிஎன்பிஎஸ்சி தேர்வு: ரயில்வே கேட் மூடப்பட்டதால் தாமதமாக வந்த தேர்வர்களுக்கு அனுமதி மறுப்பு

போக்குவரத்து வசதி இல்லாமை, ரயில்வே கேட் போன்ற தடைகளால் தேர்வுக்கு குறித்த நேரத்தில் செல்ல இயலவில்லை என தேர்வர்கள் புகார்.

HIGHLIGHTS

டிஎன்பிஎஸ்சி தேர்வு: ரயில்வே கேட் மூடப்பட்டதால் தாமதமாக வந்த தேர்வர்களுக்கு அனுமதி மறுப்பு
X

தேர்வு மையத்திற்கும்,  வாகன நிறுத்தத்திற்கும் கூடுதல் தூரம் அமைத்துள்ளதால் ஓரிரு நிமிடம் தாமதம் என்பதை காவல்துறையிடம் விளக்கம் கூறும் தேர்வர்கள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 3 தேர்விற்கு சில நிமிடங்கள் தாமதமாக வந்த 50-க்கும் மேற்பட்ட தேர்வர்களுக்கு அனுமதி மறுப்பு தெரிவித்ததால் ஏனாத்தூர் பகுதியில் உள்ள சங்கர கலை கல்லூரி முன்பு தேர்வர்கள் 30-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்ட நிலையில் காவலர்கள் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்

தமிழக அரசு பணிகளுக்கு காலி பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு தேர்வு பணியாளர் முகமை மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலமே பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அவ்வகையில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு எனப்படும் குரூப் 3 (ஏ ) எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பானது, டிசம்பர் மாதம் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டது.

கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர், கூட்டுறவுத் துறை மற்றும் பண்டக காப்பாளர், நிலை – II, தொழில் மற்றும் வர்த்தகத் துறை ஆகிய பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. எழுத்து தேர்வு , 15 மாவட்டங்களில் உள்ள 331 மையங்களில் இன்று நடைபெறுகிறது.


அந்த வகையில் காஞ்சிபுரம் அடுத்துள்ள ஏனாத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில், குரூப் 3 ஏ தேர்வானது, இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏனாத்தூர் பகுதியில் தேர்வு எழுத வந்த 50-க்கும் மேற்பட்ட தேர்வாளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக தேர்வு எழுத வந்தவர்கள், சில நிமிடங்கள் தாமதமானதால், கதவு அடைக்கப்பட்டு தேர்வாளர்களுக்கு உள்ளே அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் திடீரென காஞ்சிபுரம் ஏனாத்தூர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இது குறித்து அவர்கள் கூறுகையில், காஞ்சிபுரம் - ஏனாத்தூர் சாலையில் உள்ள ரயில்வே கேட் பூட்டப்பட்டதால் பல நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், அதேபோல் வரும் வழியில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக தாமதம் ஏற்பட்டதால், தங்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் எனவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வரும் வழியில் ஏற்பட்ட விபத்தை பார்த்த தேர்வாளர்கள் சிலர் அவர்களுக்கு உதவியும் செய்து விட்டு வந்துள்ளனர். 5 நிமிடத்திற்கும் குறைவான நேரமே தாமதமாக வந்தோம், எனவே மனிதாபிமான அடிப்படையில், உள்ளே அனுமதிக்க வேண்டும் என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களிடம், காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கலைந்து போக கூறினர்.

இதனை அடுத்து தேர்வு எழுத வந்தவர்கள், தேர்வு எழுத முடியாமல் திரும்பிச் சென்றனர். இதனால் தேர்வு நடைபெற்ற வளாகத்திற்கு வெளியே பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் ஏனாத்தூர் பகுதிக்கு போதிய அரசு தனியார் போக்குவரத்து சேவைகள் இல்லை என்பதும், ஆட்டோக்கள் அல்லது இருசக்கர வாகனத்தில் மூலமாகவே அப்பகுதிக்கு செல்ல வேண்டும் என்பதும் அவ்வழியில் ரயில்வே கேட் உள்ளதால் காலை 8.30மணிக்கும் , அதனைத் தொடர்ந்து 8.45 மணிக்கு மற்றொரு ரயிலும் ரயில் நிலையத்திற்கு வருவதால் சுமார் ஐந்து நிமிடம் ரயில்வே கேட் மூடப்பட்டு இருக்கும் .

9:00 மணிக்கு தேர்வுக்கு அனுமதிக்கப்படுபவர்கள் இதனால் கால தாமதம் ஏற்படுவதை இனிவரும் காலங்களில் தமிழ்நாடு அரசு தேர்வாளர் பணி மையத்தினர் இந்த கல்லூரியில் மையம் அமைப்பதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் தேர்வு நடைபெறும் காலங்களில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கமாகவே உள்ளது எனவும் கூறினர்

Updated On: 28 Jan 2023 9:15 AM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்