/* */

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 2-வது நாளாக 11வார்டுகளில் பகுதி சபா கூட்டம்

Kanchipuram News in Tamil -காஞ்சிபுரம் மாநகராட்சியில் 2-வது நாளாக 11வார்டுகளில் பகுதி சபா கூட்டங்கள் இன்று நடைபெற்றது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 2-வது நாளாக 11வார்டுகளில்  பகுதி சபா  கூட்டம்
X

காஞ்சிபுரம் மாநகராட்சியில்  இரண்டாவது நாளாக இன்று  பகுதி  சபா கூட்டம் நடைபெற்றது. 

Kanchipuram News in Tamil -தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தினமான நேற்று அனைத்து மாநகராட்சி நகராட்சி ஊராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபா கூட்டங்கள் நடைபெற்றது. இதில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் , கலைஞர் வீடு வழங்கும் திட்டம் , ஜல் ஜீவன் திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் தூய்மை பணியாளர் மகளிர் சுய உதவி குழுக்களை பாராட்டுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற அறிவுறுத்தப்பட்டு கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 ஊராட்சிகளில் நேற்று கிராம சபா கூட்டம் நடைபெற்றது. மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சி , குன்றத்தூர் , மாங்காடு , வாலாஜாபாத் , உத்திரமேரூர் , ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட நகராட்சி, பேரூராட்சிகளிலும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.

குறுகிய காலத்தில் இவர்களுக்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதால் வரும் நான்காம் தேதிக்குள் அனைத்து பகுதிகளிலும் பகுதி சபா கூட்டங்கள் நடத்த கால அவகாசம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் உள்ள 51 மாநகராட்சி வார்டுகளில் பகுதி சபா கூட்டங்கள் நடத்த அந்தந்த மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் உருவாக்கப்பட்ட குழு நடத்தப்பட வேண்டும் என மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் அறிவுறுத்தி இருந்தார்.

அவ்வகையில் நேற்று காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பாக 18 வார்டுகளில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தனது ஒன்பதாவது வார்டு பகுதியில் நடைபெற்ற கூட்டங்களில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பகுதி கூட்டங்கள் குறித்து எடுத்துரைத்து பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

இந்நிலையில் இன்று 2வது நாளாக காஞ்சிபுரம் மாநகராட்சியில் 11 வார்டுகளில் பகுதி சபா கூட்டங்கள் நடைபெறும் எனவும் அதற்கான வார்டுகள் அறிவிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டு பகுதியில் மாமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையில் மாஸ்டர் மாணிக்கம் தெரு பகுதியில் உள்ள திருக்கோயில்களின் வளாகத்தில் நடைபெற்றது. இந்த 5 வார்டு பகுதியில் தேர்வு செய்யப்பட்ட ஐந்து உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். இவர்களின் கீழ் மொத்தம் 20 பேர் இணைக்கப்பட்டு இப்பகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தேவைப்படும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இன்று நடைபெற்ற பகுதி எண் 1 கூட்டத்தில் நகராட்சி அலுவலர் மற்றும் மாமன்ற உறுப்பினர் ஆகியோர் கூட்டம் குறித்து விளக்கினர். இதையடுத்து அப்பகுதி சார்பாக தேவைப்படும் கோரிக்கை குறித்து கேட்கலாம் என அறிவித்தனர்.

இதற்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் புதிய விரிவாக்க பகுதி குறித்த அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும், திருப்பதிகுன்றம் சாலையில் கழிவு நீர் கால்வாயில் நீர் தேங்குவதால் இப்பகுதியில் அதிக அளவில் கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு விளைவதால் அதனை சுத்தம் செய்து மூட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும் இப்பகுதியில் அதிக அளவு மூத்த குடிமக்கள் வசிப்பதால் அவர்களின் பாதுகாப்பு நலன் கருதி காவல்துறை மூலம் சி.சி.டி.வி. கேமராக்கள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தப் பகுதி சபா கூட்டங்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும் என்பது நடைமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 Nov 2022 11:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  4. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?
  5. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  6. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  7. ஈரோடு மாநகரம்
    தீ ரோடு ஆனது ஈரோடு! சுட்டெரிக்கும் வெயில்...
  8. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  9. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  10. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி