/* */

காஞ்சிபுரத்தில் மாநகராட்சி வாகனம் மோதி சாலையை கடக்க முயன்ற முதியவர் பலி

Road Accident News Today -காஞ்சிபுரத்தில் சாலையை கடக்க முயன்ற போது‌ குப்பை வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே முதியவர் பலியானார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் மாநகராட்சி வாகனம் மோதி சாலையை கடக்க முயன்ற முதியவர் பலி
X

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் அருகே சாலையை கடக்க முயன்ற போது மாநகராட்சி வாகனம் மோதிய சி.சி.டி.வி. காட்சி.

Road Accident News Today -காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கி நாள்தோறும் பல லட்சம் டன் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் சேகரிக்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின் நாள் தோறும் இருவேளைகளில் குப்பைகள் ஊழியர்களால் சேகரிக்கப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் வீடுகள் தோறும் மக்கும் குப்பை மக்கா குப்பை என தரம் பிரிக்கப்பட்டு குறிப்பிட்ட நேரத்தில் மாநகராட்சி ஊழியர்களால் வீடுகளில் சென்று சேகரிக்கப்படுகிறது.

இந்நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் இரவு நேரங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை கையாள பெரிய மற்றும் சிறிய வகையான குப்பை லாரிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

அவ்வகை காஞ்சிபுரம் நகர் முழுவதும் இரவு நேரங்களில் குப்பைகள் சேகரிக்கப்படுவதால் காஞ்சிபுரத்தின் முக்கிய சாலைகளில் குப்பைகள் காணப்படுவதில்லை என்பது மகிழ்ச்சி அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்து வீடுகள் தோறும் குப்பைகள் குறிப்பிட்ட நேரத்தில் வரவேற்றும் உள்ளனர்.

மேலும் இது போன்ற இரவு நேர பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு போதிய ஓய்வும் பாதிக்கப்படுகிறது என்பதும் இது மாநகராட்சி முறையாக பின்பற்றி வரும் நிலையில் ஓட்டுனர்களுக்கும் தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரத்தை அடுத்த கிளார் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(64). இவர் நேற்று இரவு காஞ்சிபுரத்திற்கு பணிநிமித்தமாக வந்திருந்து மேற்கு ராஜவீதி பகுதியில் நடந்து சாலையை கடக்க முற்பட்ட போது அதிவேகமாக வந்த காஞ்சிபுரம் மாநகராட்சியின் மினி குப்பை லாரியானது முருகன் மீது மோதியது.இதில் முருகன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக துடிதுடிக்க உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாஞ்சி காவல்துறையினர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த முருகனின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சிவகாஞ்சி காவல்துறையினர் மாநகராட்சி மினி ஓட்டுநரான அம்பேத்கர் நகரை சேர்ந்த ஆனந்தத்தை கைது செய்து சிவகாஞ்சி காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் விபத்தை ஏற்படுத்திய மாநகராட்சியின் மினிலாரியையும் பறிமுதல் செய்தனர்.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லுகார தெரு பகுதியில் எதிர்மறையாக வந்த மாநகராட்சி குப்பை டிராக்டரால் பெண் ஒருவர் லாரி மோதி உயிரிழந்தார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் தற்போது அப்பகுதியில் கந்த சஷ்டி விழா காஞ்சி குமரகோட்டத்தில் கொண்டாடப்பட்டு வருவதால் போதிய காவல்துறை பாதுகாப்பும் அப்பகுதியில் 24 மணி நேரம் வழங்கப்பட்டு வருகிறது.

பொதுவாகவே வயதானவர்கள் சாலையை கடக்கும்போது காவல்துறையோ அல்லது உடன் இருப்பவரையோ சார்ந்து சாலையை கடப்பது மிக முக்கிய அவசியம் என்பதும் பார்வை குறைவு என்பதும் , போதிய வெளிச்சமின்மை என்பதும் ஏற்பட வாய்ப்புள்ளதால் , சாலை கடக்கும் பகுதிகளில் மட்டுமே சாலையை கடக்க வேண்டும் என்பதும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 28 Oct 2022 10:24 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  3. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  4. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  6. ஈரோடு
    ஈரோடு: அவல்பூந்துறை அருகே தென்னக காசி பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி...
  7. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  8. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!