/* */

தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சாரத்தை துவக்கிய அதிமுக வேட்பாளர்.

மக்களின் தேவைகளை அறிந்து வாக்குறுதிகள் அளித்து அதிமுக வெற்றி பெறும் என வேட்பாளர் ராஜசேகர் பேட்டி அளித்தார்.

HIGHLIGHTS

தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சாரத்தை துவக்கிய அதிமுக வேட்பாளர்.
X

காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் காஞ்சிபுரம் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராஜசேகர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சாரத்தை துவக்கிய போது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளிலும் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் கூட்டணிகளை இறுதி செய்தி தொகுதி பங்கீடு நிறைவு பெற்று அந்தந்த கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.

அவ்வகையில் நேற்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக சார்பில் தமிழகத்தில் போட்டியிடும் நாடாளுமன்ற வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

அவ்வகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த பரங்கிமலை ஒன்றிய அதிமுக செயலாளரும் , மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளருமான ராஜசேகர் என்பவரை அறிவித்தார்.

இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சாரத்தை துவக்குவதாக கட்சி நிர்வாகிகளுக்கும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று அதிமுக வேட்பாளர் ராஜசேகரை பெரியார் நகரிலிருந்து அதிமுகவினர் வரவேற்று, காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் சோமசுந்தரம், கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் மைதிலி திருநாவுக்கரசு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடன் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பிரச்சாரத்தை துவக்குவதாக அறிவித்தார்.

காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பெரும்பாக்கம் ராஜசேகரை காஞ்சிபுரத்தில் வரவேற்க கூடிய அதிமுக நிர்வாகிகள்

இதனைத் தொடர்ந்து அன்னை இந்திரா காந்தி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கும், கங்கைகொண்டான் மண்டபம் அருகே அமைந்துள்ள பெரியார் சிலை, ரயில்வே சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை, ஓரிக்கை கூட்டு சலையில் உள்ள அம்பேத்கர் சிலை உள்ளிட்டுவைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து உத்திரமேரூர் வாலாஜாபாத் சாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்தார்.

இதனிடையே செய்தியாளரிடம் பேசுகையில் , காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி மக்களின் தேவைகளை அறிந்தும் , அதிமுகவின் தேர்தல் அறிக்கையின் படியும் தொகுதி மக்களிடம் வாக்குகள் கேட்டு வெற்றி பெறுவேன் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதி கழக செயலாளர்கள் , மாமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய கழக செயலாளர் என பல அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 21 March 2024 1:00 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  5. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  6. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  8. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  9. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  10. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...