/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் நிரம்பிய 17 ஏரிகள்

Northeast Monsoon in Tamilnadu -காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 14 ஏரிகள் உள்ள கொள்ளளவும் 32 ஏரிகள் 75% நிரம்பி உள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் நிரம்பிய 17 ஏரிகள்
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய ஏரிகளில் ஒன்றான தாமல் ஏரி நிரம்பி உபரி நீர் கலங்கள் வழியாக செல்லும் காட்சி.

Northeast Monsoon in Tamilnadu -தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில் காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று முதல் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் அறிவித்தது.

மேலும் கனமழை காரணமாக காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறைகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்தனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகாலை முதலே அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 14 ஏரிகள் முழு கொள்ளளவையும், 32 ஏரிகள் 75 சதவீதத்தையும், 89 ஏரிகள் 50 சதவீதத்தையும் எட்டியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிக முக்கிய பெரிய ஏரிகளில் ஒன்றான தாமலே ஏரி தனது முழு கொள்ளளவான 18 அடியை எட்டியுள்ளது இதே போல் தென்மேரி 18 அடி கொள்ளவில் 13 புள்ளி 50 அடி நீர் நிரம்பி வருகிறது.

இதேபோல் உத்திரமேரூர் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளிலும் உள்ள முக்கிய ஏரிகள் நிரம்பி வருகிறது.

மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்று தடுப்பணைகள் நிரம்பியது தற்போதுதிருமுக்கூடல் பகுதியில் தடுப்பணையை வழிந்து செல்லும் பாலாற்று நீர் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த பழையசீவரம் பகுதியில் முக்கடல் சங்கமிக்கும் திருமுக்கூடல் பகுதியில் அமைந்துள்ள பழையசீவரம் - உள்ளாவூர் தடுப்பணை முழுவதுமாக நிரம்பி தடுப்பணை தாண்டி நீர் வழிந்து செல்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செல்லும் முக்கிய ஆறான வேகவதி ஆறு, பாலாறு, செய்யாறு என மூன்று ஆறுகளும் திருமுக்கூடல் பகுதியில் சங்கமித்து பாலாற்று வழியாக செல்லும் இந்த நிலையில் தொடர் மழை காரணமாக செய்யாற்றில் மட்டும் நீர் செல்கிறது. தடுப்பணையை தாண்டி நீர் வழிந்து செல்வதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யாறு செல்லும் வெங்கச்சேரி மற்றும் அனுமன்தண்டலம் தடுப்பணையில் தாண்டி நீர் வழிந்து செல்கிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் ஏரி பகுதிகளான குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் நேற்று முதல் கன மழை பெய்து வருவதால் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.

மேலும் செம்பரம்பாக்கம் ஏரியில் அதன் முழு கொள்ளளவு 24 அடியில் தற்போது 20.29 அடி நீர் உள்ளதாக பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 8 மணி முதல் தொடர்ந்து அவ்வப்போது கனமழையும் சாரல் மழை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பெய்து கொண்டு உள்ளது.

மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தை ஒட்டியுள்ள திருவண்ணாமலை மற்றும் வேலூர் பகுதிகளிலும் கன மழை பெய்து வருவதால் பாலாறு மற்றும் செய்யாறு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துக் கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 1 Nov 2022 11:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  3. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  4. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  5. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  6. திருவள்ளூர்
    பெரியபாளையம் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி...
  7. நாமக்கல்
    சாலை விபத்தில் சிக்கியவரை தனது காரில் அனுப்பி வைத்த நாமக்கல் ஆட்சியர்...
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல்...
  9. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!