/* */

மருத்துவர் இல்லாத அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

உளுந்தூர்பேட்டை அடுத்த களமருதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர், செவிலியர் இல்லாமல் முதலுதவி கிடைக்காத அவலநிலை.

HIGHLIGHTS

மருத்துவர் இல்லாத அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
X

களமருதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த களமருதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் செவிலியர் இல்லாமல் முதலுதவிக்கு வரும் ஒவ்வொரு நோயாளிகளையும் அலைக்கழிக்கும் அவலநிலை.

களமருதூர் அருகே உள்ளநன்னாரம் கிராமத்தில் இரவு 2 மணி அளவில் முதியவர் ஒருவருக்கு தேள் கொட்டியது. அவரை உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் களமருதூர் அழைத்து சென்றனர். ஆனால், அங்கு டாக்டர் செவிலியர் யாரும் இல்லை எனவும் அவருக்கு டிடி ஊசி போட முடியாது எனவும் அங்கிருந்த பணியாளர் கூறியுள்ளார்.

மேலும், தொடர்ந்து மூன்று நாட்களாக இரவு நேரங்களில் பணிக்கு டாக்டர் செவிலியர் இல்லையெனவும் அவர் கூறினார். இதனை அடுத்து வாக்கு வாதத்திற்கு பிறகு ஒரு மணி நேரம் கழித்து கைபேசி மூலம் செவிலியரை அழைத்து வரவைத்து அந்த முதியவருக்கு முறையான முதல் உதவி செய்யப்பட்டது.

அவசர முதலுதவி தேவைப்படும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் மருத்துவரோ செவிலியரோ இல்லாதது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 26 Sep 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  2. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  3. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  4. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  5. தொழில்நுட்பம்
    எச்.எம்.டி பல்ஸ்: சுயமாக சரிசெய்யும் ஸ்மார்ட்போன்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  7. ஈரோடு
    தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா
  9. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  10. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...