/* */

பெற்ற பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய்

கணவர் இறந்த மன உளைச்சலில் பெற்ற பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய். பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்

HIGHLIGHTS

பெற்ற பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய்
X

குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்த தாயை காப்பாற்றிய தீயணைப்பு துறையினர்

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் முனுசாமி (40) இவர் தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஐஸ்வர்யா (34) இவர்களுக்கு கமலேஷ் (4) ரக்ஷன்(2) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு முனுசாமி வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது ஆவடி ரயிலில் விபத்துக்குள்ளாகி இறந்து உள்ளார். அதன் பிறகு அவருடைய மனைவி ஐஸ்வர்யா கணவர் முனுசாமியை நினைத்து அழுது புலம்பியபடியே இருந்துள்ளார்.

இரண்டு குழந்தைகளை எப்படி காப்பாற்றுவது என கடும் மன உளைச்சலில் இருந்த நிலையில் ஐஸ்வர்யா தனது 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே வந்து அருகிலுள்ள கோயில் வளாகத்தில் 20 அடி ஆழம் உள்ள கிணற்றில் தனது 2 குழந்தைகளுடன் குதித்துள்ளார்.

இதனை அங்கே கோயிலுக்கு வந்து பக்தர்கள் அதனை பார்த்து காப்பாற்றும் முயற்சியில் கயிறு கட்டி இறங்கியுள்ளனர். இரண்டு பேர் குழந்தைகளை மட்டும் மீட்ட அவர்களால் குழந்தைகளின் தாயை மீட்க முடியாமல் போனது. உடனே அருகிலுள்ள ஆவடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் ஐஸ்வர்யாவை மீட்டனர்.

பின்பு தாயும் இரண்டு குழந்தைகளையும் சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைக்கு பின் அவரது உறவினர்களுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 29 Sep 2021 3:36 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  5. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  6. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  7. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  8. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  9. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  10. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!