/* */

பவானி அருகே குடிசை வீட்டில் தீ: மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலி

சின்னவடமலைபாளையத்தில் குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உடல் கருகி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பவானி அருகே குடிசை வீட்டில் தீ: மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலி
X

தீ விபத்தில் சேதமடைந்த வீடு.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே சின்னவடமலைபாளையம் பகுதியை சேர்ந்தவர் சிரங்காயீ. இவர் தனது மகள் அய்யம்மாள் என்பவருடன் வசித்து வருகிறார். அய்யம்மாளுக்கு 13ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை பிறந்ததில் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து இன்று அதிகாலை அய்யம்மாள் அவரது தாயாரின் குடிசை வீட்டிற்கு வெளியே சமையல் செய்வதற்கு அடுப்பை பற்றி வைத்த போது எதிர்பாராத விதமாக அடுப்பில் இருந்த தீ பரவி குடிசை வீட்டில் பரவியது.

இதன் பின்னர் உள்ளே மனநலம் பாதிக்கப்பட்ட அய்யம்மாள் மீதும் தீ பற்றியது. இதற்கிடையே தீ வீடு முழுவதும் பற்றி எரிந்து சேதமடைந்தது. இதில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உடல் கருகி உயிரிழந்தார். இதன் பின்னர் அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பவானி போலீசார் உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 18 Feb 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  2. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  3. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  4. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  5. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  6. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  7. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  8. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  9. திருவள்ளூர்
    நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்!
  10. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...