/* */

ஈரோடு மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி

Erode news- நாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்ற உள்ள 10,970 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஈரோடு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) பயிற்சி அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி
X

Erode news- அந்தியூர் மங்கலம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Erode news, Erode news today- நாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்ற உள்ள 10,970 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஈரோடு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) பயிற்சி அளிக்கப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்பினை ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் நாடாளுமன்றத் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் உள்ளிட்ட 8 தொகுதிகளில் மொத்தம் உள்ள 2,222 வாக்குச்சாவடி மையங்களில் 2,666 முதன்மை அலுவலர்களும், 2,666 முதல் நிலை அலுவலர்களும், 2,666 இரண்டாம் நிலை அலுவலர்களும், 2,666 மூன்றாம் நிலை அலுவலர்களும், 306 நான்காம் நிலை அலுவலர்களும் என மொத்தம் 10,970 அலுவலர்கள் தேர்தல் பணியினை மேற்கொள்ள உள்ளனர்.


இதில், 2,222 வாக்குச்சாவடிகளில், 255 வாக்குச்சாவடிகள் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ளவை ஆகும்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு ரங்கம்பாளையம் டாக்டர் ஆர் ஏ என் எம் கலை அறிவியல் கல்லூரியிலும், ஈரோடு மேற்கு தொகுதிக்கு ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையமும், மொடக்குறிச்சி தொகுதிக்கு மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பெருந்துறை தொகுதிக்கு பெருந்துறை -சென்னிமலை சாலை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், பவானி தொகுதிக்கு பவானி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், அந்தியூர் தொகுதிக்கு அந்தியூர் மங்கலம் மேல்நிலை பள்ளியிலும், கோபி தொகுதிக்கு மொடச்சூர் சாரதா மெட்ரிக் மேல்நிலை பள்ளியிலும், பவானிசாகர் தொகுதிக்கு சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரியிலும் முதற்கட்ட பயிற்சி நடந்தது.

சத்தியமங்கலம் காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோபிசெட்டிபாளையம் சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் அந்தியூர் மங்களம் மெட்ரிக்குலேசன் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற வாக்குசாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி மற்றும் மாதிரி வாக்குப்பதிவு மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாலும் முறை மற்றும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

மேலும், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை எவ்வித தொய்வின்றி மேற்கொள்ளுமாறும், ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் சுமூகமாக நடைபெற நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Updated On: 24 March 2024 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  2. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  3. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  4. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  5. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  6. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  7. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  8. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  9. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?
  10. தமிழ்நாடு
    22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு