/* */

பவானிசாகர் அணையின் இன்றைய (டிச.14) நீர்மட்ட நிலவரம்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி 84.11 அடியாக உள்ளது.

HIGHLIGHTS

பவானிசாகர் அணையின் இன்றைய (டிச.14) நீர்மட்ட நிலவரம்
X

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி 84.11 அடியாக உள்ளது.

தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் அண்மையில் கன மழை பெய்து வந்தது. இதனால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து. இதனிடையே, தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து 2,000 கன‌ அடியாக குறைந்துள்ளது.

வியாழக்கிழமை (டிச.14) இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-

நீர் மட்டம் - 84.11 அடி ,

நீர் இருப்பு - 17.96 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 2,077

நீர் வெளியேற்றம் - 2,400 கன அடி ,

கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 2,000 கன அடி நீரும், அரக்கன் கோட்டை- தடப்பள்ளி வாய்க்காலில் 300 கன அடி நீரும் , குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 100 கன அடி நீரும் என மொத்தம் 2,400 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Updated On: 14 Dec 2023 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  2. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  3. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  4. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  6. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  7. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  8. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!