/* */

ஈரோடு தொகுதியில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக விஜயகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

ஈரோடு தொகுதியில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் அறிவிப்பு
X

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் விஜயகுமார்.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக விஜயகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாரதிய ஜனதா கூட்டணி சார்பில், ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பி.விஜயகுமாரின் சுய விபரம்:-

தமாகா வேட்பாளர் பெயர்: பி.விஜயகுமார் (வயது 55) த/பெ பொங்கியண்ண கவுண்டர்.

விலாசம் : பயணியர் எஸ்டேட், லட்சுமி நகர், மேட்டுநாசுவம்பாளையம், ஈரோடு.

பிறந்த தேதி: 20.11.1969.

கல்வி : ஈரோடு மாவட்டம் பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு நிறைவு செய்தார். தாராபுரம் பாலிடெக்னிக் கல்லூரியில் பாலிடெக்னிக் பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.

குடும்ப விவரம்:- இவர் விவசாய குடும்பத்தை சார்ந்தவர் ஆவார். இவருக்கு சுமதி (வயது 51) மனைவியும், விஜய் சூர்யா என்ற மகனும் லாஷிகா ப்ரீத்தி மகளும் உள்ளனர்.

தொழில் : ரியல் எஸ்டேட் & விவசாயம்.

கட்சியில் வகித்த பொறுப்புகள்:- 2010 இல் இருந்து 2012 வரை ஒருங்கிணைந்த காங்கிரஸ் கட்சியில் இளைஞர் அணியின் மாவட்ட தலைவராக பணியாற்றியுள்ளார்.

2013 முதல் 2015 வரை காங்கிரஸ் கட்சியின் விவசாய அணியின் மாவட்ட தலைவராக தொடர்ந்து பணியாற்றியுள்ளார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் பிரியும் வரை மாவட்ட தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஈரோடு மாவட்ட தலைவராக பணியாற்றி வருகிறார்.

Updated On: 22 March 2024 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’