/* */

சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57வது ஆண்டு விழா வியாழக்கிழமை (இன்று) நடந்தது.

HIGHLIGHTS

சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
X

சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழா

சித்தோடு அருகே உள்ள ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57வது ஆண்டு விழா வியாழக்கிழமை (இன்று) நடந்தது.

ஈரோடு அடுத்த சித்தோடு அருகே உள்ள ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கல்லூரி முதல்வர் (பொ) தாமரைக்கண்ணன் ஆண்டறிக்கையை வாசித்தார். கல்லூரி செயலாளர் ரோட்டரியன் சதாசிவம் தலைமை உரை ஆற்றினார். முன்னாள் செயலாளர் ஹிமாவதி சதாசிவம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

விழாவில், கோவை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் (பொ) ரூபா குணசீலன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பணி ஓய்வு பெறும் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களை பாராட்டி பரிசு வழங்கினார். கோவை ரூட்ஸ் குரூப் ஆப் கம்பெனியின் இயக்குநர் கவிதாசன் கெளரவ விருந்தினராக கலந்து கொண்டு பல்கலைக்கழக அளவில் தர வரிசையில் இடம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கினார்.

இவ்விழாவில், 25 ஆண்டுகள் பணி புரிந்தவர்கள் மற்றும் பணி நிறைவு பெற்ற பேராசிரியர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு மடல் வழங்கப்பட்டது. மேலும், 43 மாணவ, மாணவியர்களுக்கு புரவலர் திட்ட உதவித்தொகையும், படிப்பு, விளையாட்டு, தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டங்களில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது.

இந்த விழாவில், கல்லூரி நிர்வாகத்தினர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு கொண்டனர்.

Updated On: 28 March 2024 12:20 PM GMT

Related News

Latest News

  1. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  2. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  3. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  4. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  5. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  6. தமிழ்நாடு
    22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு
  7. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  8. லைஃப்ஸ்டைல்
    எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!
  9. சினிமா
    தளபதி விஜய்யின் வசனங்கள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!