/* */

அந்தியூர் பேரூராட்சியில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அந்தியூர் பேரூராட்சியில் நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில் 66 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

HIGHLIGHTS

அந்தியூர் பேரூராட்சியில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.திமுக அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் கடந்த மாதம் 28ம் தேதியிலிருந்து பிப்ரவரி 4ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் வேட்புமனு பரிசீலனை முடிந்து, நேற்று வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் அந்தியூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் மொத்தம் 66 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.மொத்தம் 18 வார்டுகளில் 15 வார்டுகளில் திமுக வேட்பாளர்களும் மீதமுள்ள மூன்று இடங்களில் கூட்டணி கட்சி வேட்பாளர்களும், அனைத்து வார்டுகளிலும் அதிமுக வேட்பாளர்களும் போட்டியிடும் நிலையில், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 8 Feb 2022 3:30 PM GMT

Related News