/* */

பவானி சன்னியாசிப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மக்கள் போராட்டம்

நூறுநாள் வேலை திட்டம் தொடர்பாக சன்னியாசிப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் மீது பொதுமக்கள் புகார் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

பவானி சன்னியாசிப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மக்கள் போராட்டம்
X

சன்னியாசி பட்டி ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் மீது புகார் கூறி  மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே சன்னியாசிப்பட்டி ஊராட்சியில் நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வேலை பார்த்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த சில தினங்களாக நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறையாக யாருக்கும் வேலை கொடுக்காமல் பயனாளர் அட்டை பெறுவதற்கு பயனாளிகளிடம் தலா இரண்டாயிரம் ரூபாய் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கேட்கப்பட்டுள்ளது.

இதனால் நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு வேலை செய்ய பெரும்பாலான, கிராம மக்கள் செல்லாமால் வேலையை புறக்கணித்தனர்.அப்போது விவசாய கூலித்தொழில் இல்லாத நிலையில் நூறுநாள் வேலையை சார்ந்து இருக்கக்கூடிய நிலையில் திடீரென இரண்டாயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் வேலை என்று கூறப்படுவதாகவும், கேட்டால் வீட்டிற்கு குடிநீர் இணைப்பிற்கு, குழாய் பதிப்பதற்கு கேட்பதாகவும் ஊராட்சி சார்பில் தெரிவிக்கப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து குடிநீர் குழாயில் சரிவர தண்ணீர் இல்லாத நிலையில் கிராம மக்கள் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.இதனால் ஊராட்சியில் நூறுநாள் வேலைவாய்ப்பில் திட்டத்தில் நிகழும் முறைகேடுகளை தவிர்க்க வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 19 April 2022 10:15 AM GMT

Related News