/* */

அந்தியூர் அருகே சாலை விபத்தில் மகன் கண் முன்னே தாய் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சாலை விபத்தில், மகனின் கண் எதிரே தாய் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்த சோகம்

HIGHLIGHTS

அந்தியூர் அருகே சாலை விபத்தில் மகன் கண் முன்னே தாய் உயிரிழப்பு
X

சாலை விபத்து ஏற்பட்ட இடத்தில் எடுக்கப்பட்ட படம்.

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி சேர்ந்த பழனி மனைவி தனபாக்கியம். இவர், தனது மகன் பாலகுமாரனுடன் நெற்று, மாலை, கொண்டலாம்பட்டியில் இருந்து ஈரோடு மாவட்டம் அந்தியூர் வழியாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள ஊக்கியம் மாரியம்மன் கோவில் பண்டிகைக்காக இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
மூலக்கடை அருகே உள்ள ராமகவுண்டன் கொட்டாய் கருப்புசாமி கோவில் அருகில் சென்று கொண்டிருந்தபோது, அந்தப் பகுதியில் சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்த மாடு ஒன்று, சாலையின் குறுக்கே ஓடியது. இதை சற்றும் எதிர்பாராத பாலகுமாரன், திடீரென பிரேக்கை அழுத்தியதில், நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட தனபாக்கியம், சம்பவ இடத்திலேயே பாலகுமாரன் கண்ணெதிரே துடிதுடித்து உயிரிழந்தார்.
தகவலறிந்த வெள்ளித்திருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். நெற்றி கை கால் ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்ட பாலகுமாரன் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மகனின் கண்ணெதிரே தாய் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 25 April 2022 11:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்