/* */

அந்தியூரில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்த எம்.எல்.ஏ. வெங்கடாசலம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் நகரில் திமுக கட்சியின் சார்பில் நீர்மோர் பந்தலை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

அந்தியூரில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்த எம்.எல்.ஏ. வெங்கடாசலம்
X

அந்தியூர் தவிட்டுப்பாளையம் பிரம்மதேசம் பிரிவில் திமுக சார்பில் நீர்மோர் பந்தலை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அந்தியூர் நகரில் திமுக கட்சியின் சார்பில் நீர்மோர் பந்தலை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நாளுக்கு நாள் வெயில் சுட்டெரித்து வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் நகரில் பொதுமக்கள் நடமாட்டம் மிகக் குறைவாக காணப்படுகிறது.

இதனால், பொதுமக்களின் உடல் நலனைக் கருதி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் அந்தியூர் பேரூர் திமுக சார்பில் பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டானா மற்றும் தவிட்டுப்பாளையம் பிரம்மதேசம் பிரிவு ஆகிய பகுதிகளில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

விழாவுக்கு, அந்தியூர் பேரூர் திமுக செயலாளர் எஸ்.கே.காளிதாஸ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் நீர் மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து மக்களுக்கு நீர்மோர், தர்பூசணி உள்ளிட்டவற்றை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள், துணைத் தலைவர் பழனிச்சாமி, ஒன்றிய திமுக பொருளாளர் பிரகாசம், ஈரோடு வடக்கு மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகசுந்தரம், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், பேரூர் துணைச் செயலாளர் பாப்பாத்தி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் யாஸ்மின் தாஜ், கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 29 April 2024 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது