/* */

கோபிசெட்டிபாளையம் அருகே போலி லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே போலி லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் அருகே போலி லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட இசக்கிராஜா, ராமசாமி, ராஜேந்திரன்

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கே.என்.பாளையத்தில், தடை செய்யப்பட்ட போலி லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெறுவதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு புகார் வந்தன. இந்நிலையில், டி.என்.பாளையம் வாய்க்கால் ரோடு பகுதியை சேர்ந்த தண்டபாணி என்பவர், கே.என்.பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தது கொண்டு இருந்தார்.

அப்போது நால்ரோட்டை சேர்ந்த இசக்கிராஜா (வயது 42), கே.என்.பாளையத்தை சேர்ந்த ராமசாமி (வயது 59). ராஜேந்திரன் (வயது 50), சிங்கப்பூர் ராஜா மற்றும் அன்னூர் பழனிச்சாமி ஆகியோர் அங்கு வந்து அவரிடம் லாட்டரி டிக்கெட் வாங்குமாறு கட்டாயப்படுத்தினர்.

இதையடுத்து தண்டபாணி அவர்களிடம் லாட்டரி டிக்கெட்டை வாங்கினார். அப்போது அது போலி லாட்டரி டிக்கெட் என்பது தெரிய வந்தது. இது குறித்து தண்டபாணி பங்களாப்புதூர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இசக்கிராஜா, ராமசாமி, ராஜேந்திரன் ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் போலி லாட்டரி விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து பங்களாபுதூர் போலீசார் அவர்களிடம் இருந்து 120 போலி லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர். தலைமறைவான சிங்கப்பூர் ராஜா, பழனிச்சாமி ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 19 March 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...