/* */

கொடிவேரி அணை இன்று மூடல்: சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு தடை

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், இன்று (அக்டோபர் 10) செவ்வாய்க்கிழமை அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

கொடிவேரி அணை இன்று மூடல்: சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு தடை
X

கொடிவேரி அணை.

கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், இன்று (அக்டோபர் 10) செவ்வாய்க்கிழமை அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணை வழியாக செல்கிறது. இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில், பவானிசாகர், சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் மற்றும் கொடிவேரி அணை உள்ளிட்ட பகுதிகளில் திங்கட்கிழமை (நேற்று) இரவு 74.4 மி.மீ மழை மழை கொட்டி தீர்த்தது. இதனால் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தற்போது, அணையில் இருந்து வினாடிக்கு 1,302 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது.

இதையொட்டி, பாதுகாப்பு கருதி கொடிவேரி தடுப்பணையில் குளிப்பதற்கும், சுற்றுலா பயணிகள் வருவதற்கும் இன்று (அக்டோபர் 10) செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அணையின் நுழைவு வாயிலில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Updated On: 11 Oct 2023 5:04 AM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  2. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  3. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  4. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  6. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  7. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  9. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்