/* */

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 85 கன அடியாக குறைவு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து 112 கன அடியில் இருந்து 85 கன அடியாக குறைந்துள்ளது.

HIGHLIGHTS

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 85 கன அடியாக குறைவு
X

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து 112 கன அடியில் இருந்து 85 கன அடியாக குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அணையில் போதிய நீர் இருப்பு இருந்ததால், கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி முதல் கீழ்பவானி இரண்டாம் போக புன்செய் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது 2வது சுற்றுக்கான தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த சில நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால், பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து வெகுவாக குறைந்து தற்போதைய நிலவரப்படி நீர்வரத்து 112 கன அடியில் இருந்து 85 கன அடியாக குறைந்துள்ளது.

மேலும், அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் மெல்ல சரிந்து வருகிறது. தற்போது, அணையின் நீர்மட்டம் 71 அடியாக சரிந்துள்ளது.

வியாழக்கிழமை (பிப்.22) இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-

நீர் மட்டம் - 71.29 அடி ,

நீர் இருப்பு - 11.50 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 85 கன அடி ,

நீர் வெளியேற்றம் வினாடிக்கு - 800 கன அடி ,

பாசனத்திற்காக அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் வினாடிக்கு 700 கன அடி நீரும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 100 கன அடி நீரும் என மொத்தம் 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Updated On: 22 Feb 2024 4:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  2. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  3. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  4. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  5. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  6. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  7. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  8. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  9. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  10. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!