/* */

சிவகிரியில் மனுநீதி நாள் முகாம்; 190 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில், 190 பயனாளிகளுக்கு ரூ.58.18 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

சிவகிரியில் மனுநீதி நாள் முகாம்; 190 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X

மனுநீதி நாள் முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கேட்டறிந்தார்.

ஈரோடு மாவட்டம், சிவகிரியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில், 190 பயனாளிகளுக்கு ரூ.58.18 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள சிவகிரியில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை (நேற்று) நடைபெற்றது. இம்முகாமிற்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார்.

இதில், 190 பயனாளிகளுக்கு ரூ.58.18 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது:

ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டத்திற்கு உட்பட்ட சிவகிரி பகுதியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்று வருகின்றது. மனுநீதி நாள் முகாம் என்பது மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இம்மனுநீதி நாள் முகாம் நடத்தப்படுகிறது.


இம்முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மற்றும் கோரிக்கைகளை தீர்ப்பது தான் இம்முகாமின் முக்கிய நோக்கமாக உள்ளது. இம்முகாமில் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் மூலமாக பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் நமது சமூக நலனை பாதுகாத்திடும் வகையிலும், வருங்கால வளர்ச்சிக்கு உதவிகரமாகவும் திட்டங்களை செயல்படுத்தக் கூடிய துறைகள் குறித்தும் பல்வேறு துறை அலுவலர்கள் மூலமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மகளிர் திட்டம் மூலம் பெண்களுக்கு சுய வேலைவாய்ப்பினை ஏற்படுத்துவது குறித்து பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இளைஞர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.


மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் சார்பில் இளைஞர்களுக்காக திறன் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதனை இளைஞர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஐடிஐ மூலம் உடனடி வேலை வாய்ப்பினை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மேலும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் தான் நமது எதிர்காலம். அவர்களை பாதுகாத்திட பொதுமக்கள் முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது, மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்கும்.


மேலும், குழந்தைகளின் பாதுகாப்பில் நாம் அனைவரும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருப்பதோடு, அவர்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இன்றைய காலகட்டத்தில் கல்வி என்பது மிகப்பெரிய செல்வம் ஆகும். அச்செல்வத்தை பெற குழந்தைகள் இடைநிற்றலை தவிர்த்திடும் வகையில் தமிழக அரசு நான் முதல்வன், புதுமைப்பெண், காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இன்று நடைபெறும் மனுநீதி முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மகளிர் திட்டம், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 190 பயனாளிகளுக்கு ரூ.58.18 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.


அரசின் திட்டங்களை பொதுமக்கள் நல்ல முறையில் அறிந்து கொண்டு பயன்பெற வேண்டுமெனவும், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்டுள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மேலும் ஈரோடு மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக நடைபெற்று வரும் முகாம்களை வருகிற ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தார்.முன்னதாக, இம்முகாமில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


மேலும், தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கிடும் வகையில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆகிய துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளையும் பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து, கொடுமுடி ஊராட்சி ஒன்றியம் சிவகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.18.70 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தினையும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4.78 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வாரச்சந்தை கட்டிடத்தின் கட்டுமானப் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஸ்குமார், தனித்துணை ஆட்சியர் ராஜகோபால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரங்கநாதன், இணை இயக்குநர் (பொ) (வேளாண்மை) முருகேசன், செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) விஸ்வநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தாமணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதைச்செல்வி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கோதை, கொடுமுடி வருவாய் வட்டாட்சியர்கள் பாலகுமார், ரவிக்குமார், சிவகிரி பேரூராட்சி தலைவர் பிரதீபா கோபிநாத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர் மகேந்திரன்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Aug 2023 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு