/* */

ஈரோடு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Farmers Grievance Day Meet ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டம்
X

விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளைக் கேட்டறிந்த ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.

Farmers Grievance Day Meet

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கீழ்பவானி வாய்க்காலில் தொடர்ந்து நீர் திறக்க வேண்டும். தென்னையில் வாடல் நோய், ஈ தாக்கல் கட்டுப்படுத்துவது குறித்தும், தென்னையில் பதநீர் இறக்கி சந்தை படுத்துவது தொடர்பாகவும், மேட்டூர் வலது கரை வாய்க்கால் கிளை வாய்க்கால்களில் உள்ள முட்புதர்களை சுத்தம் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கரும்பு கொள்முதல் விலை உயர்த்தி வழங்கிட வேண்டும். நீர் அளவிடும் கருவி, மாசு அளவிடும் கருவி போன்றவற்றை பவானி ஆற்றில் அமைக்கப்பட வேண்டும்.

அனைத்து வகையாக தேங்காய் பருப்புகளை கொள்முதல் செய்திட வேண்டும். மஞ்சள் இருப்பு வைக்கும் பொருட்டு 10,000 டன் அளவில் குடோன் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கொப்பு வாய்க்கால் மற்றும் எல்.பி.பி வாய்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை நீர் திறப்பிற்கு முன்பே அகற்றிட வேண்டும். வனப்பகுதியில் உள்ள களைச் செடிகளை அகற்றிட வேண்டும். ஓடத்துறை குளத்தை சுற்றி வனத்துறை மூலம் மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை குறித்து விவசாயிகள் மனு அளித்தனர்.

முன்னதாக, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் மாவட்ட அளவில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடியில் சிறந்து விளங்கிய அந்தியூர் வட்டம் எண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபிரதாப் விவசாயி அவர்களுக்கு முதல் பரிசுத்தொகை ரூ.15 ஆயிரமும், பெருந்துறை, நிமிட்டிபாளையத்தைச் சேர்ந்த ஜெயபிரதாப் விவசாயி அவர்களுக்கு 2ம் பரிசுத்தொகை ரூ.10 ஆயிரமும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், வேளாண்மை இணை இயக்குநர் வெங்கடேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தாமணி, செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்) விஸ்வநாதன், துணை இயக்குநர் (தோட்டக்கலை) மரகதமணி, துணை இயக்குநர் (வேளாண்‌ வணிகம்) மகாதேவன், ஈரோடு விற்பனைக் குழு துணை இயக்குநர் சாவித்திரி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜ்குமார் மற்றும் அனைத்துத் துறைகளை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 29 Feb 2024 1:15 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்