/* */

ஈரோடு புதிய கலெக்டராக கிருஷ்ணன் உன்னி பொறுப்பேற்றார்

ஈரோடு மாவட்ட கலெக்டராக கிருஷ்ணன் உன்னி கோப்புகளில் கையெழுத்திட்டு, இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

HIGHLIGHTS

ஈரோடு புதிய கலெக்டராக கிருஷ்ணன் உன்னி பொறுப்பேற்றார்
X

ஈரோடு கலெக்டராக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட கிருஷ்ணன்உன்னி.

தமிழக அரசு அண்மையில் மாவட்ட கலெக்டர் மற்றும் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி, தேனி மாவட்ட கலெக்டராக இருந்த கிருஷ்ணன் உன்னி, ஈரோடு மாவட்டத்தின் புதிய கலெக்டராக மாற்றப்பட்டர்.

இந்த நிலையில், ஈரோடு மாவட்ட கலெக்டராக கிருஷ்ணன்உன்னி கோப்புகளில் கையெழுத்திட்டு, இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈரோடு கலெக்டர் கிருஷ்ணன்உன்னி, தற்போது கொரோனா காலமாக உள்ளதால் முழு முயற்சியாக கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளப்படும் என்றார்.

தமிழக அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில் தடுப்புப்பணிகள் மற்றும் தடுப்பூசிகள் போடும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்ற அவர், தனியார் பள்ளிகளில் முழு கட்டணம் செலுத்துவது தொடர்பாக புகார் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கலெக்டர் கிருஷ்ணன் உன்னி, 2012ஆம் ஆண்டு இந்திய ஆட்சி பணியாளராக தேர்ச்சி பெற்று, 2013 முதல் 2016 வரை ஈரோடு, திருச்சி மாவட்டங்களில் துணை ஆட்சியராகவும், 2017 முதல் 2019 வரை நிதித்துறை துணைச் செயலராகவும், 2020 ஆம் ஆண்டு நிதித்துறை இணைச் செயலாளராகவும் பணியாற்றிய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 16 Jun 2021 7:57 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...