/* */

ஈரோடு பெரிய‌ மாரியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது..

Erode Periya Mariamman-ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோவில்களின் குண்டம் தேர்த்திரு விழா நேற்று இரவு பூச்சாட்டுதலுடன் தொடங் கியது..

HIGHLIGHTS

Erode Periya Mariamman
X

Erode Periya Mariamman

Erode Periya Mariamman-ஈரோடு மாநகர் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் மற்றும் அதன் வகையறா கோவில்களின் குண்டம் தேர்த்திருவிழா நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி ஈரோடு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

விழாவையொட்டி ஈரோடு பெரிய மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலில் அம்மனை தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் பக்தர்கள் சென்று அம்மனை தரிசனம் செய்தனர். இதேபோல், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களிலும் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தார்கள். இதையொட்டி மூன்று கோவில்களிலும் ஈரோடு டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வருகிற 25-ம் தேதி இரவு 8.30 மணிக்கு பட்டாளம்மன் அபிஷேகமும், இரவு 10 மணிக்கு கம்பம் நடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதில் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் கம்பங்கள் நடப்படுகின்றன. 29-ம் தேதி இரவு 10.30 மணிக்கு கிராம சாந்தி பூஜையும், 30-ம் தேதி மாலை 5 மணிக்கு கொடியேற்றமும் நடக்கிறது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா நடக்கிறது.

இரவு 8 மணிக்கு மாவிளக்கு பூஜையும், கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 5-ம் தேதி காலை 9.30 மணிக்கு பொங்கல் விழா நடைபெறுகிறது. அன்றைய தினம் சின்ன மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடக்கிறது. 6-ம் தேதி இரவு 9.30 மணிக்கு பெரிய மாரியம்மனின் மலர் பல்லக்கு திருவீதி உலா நடைபெறுகிறது. 7-ம் தேதி இரவு 8 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன், 9.30 மணிக்கு சின்ன மாரியம்மன் மலர் பல்லக்குகளில் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். மஞ்சள் நீராட்டு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் பிடுங்கும் விழாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் 8-ம் தேதி மதியம் 3 மணிக்கு நடைபெறுகிறது.

பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் இருந்த பிடுங்கப்படும் கம்பங்கள் மணிக்கூண்டு பகுதிக்கு எடுத்து வரப்படும். அங்கிருந்து ஈரோடு மாநகரில் முக்கிய சாலைகளில் அதாவது ஈஸ்வரன் கோவில் வீதி, தெப்பக்குளம் வீதி, ஜி எச் ரோடு, மேட்டூர் ரோடு, எல்லை மாரியம்மன் கோவில் வீதி, மஜீத் விதி, கம்பங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காலிங்கராயன் வாய்க்காலில் விடப்படும். 9-ம் தேதி நடைபெறும் மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 3 April 2024 5:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது