/* */

பள்ளிகள் திறப்பு: ஈரோட்டில் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரம்

பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு வாரமே இருப்பதால் ஈரோட்டில் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரம்

HIGHLIGHTS

பள்ளிகள் திறப்பு: ஈரோட்டில் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரம்
X

பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு வாரமே இருப்பதால் ஈரோட்டில் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரம்

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எனினும் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் அரசு தொலைக்காட்சி, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளதையடுத்து தமிழக அரசு வரும் செப்டம்பர் 1 ஆம் தேதியிலிருத்து 9 -ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய அரசு வழிகாட்டி நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்றும் சுழற்சி முறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தவும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள பள்ளிகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு திறக்கப்படுவதால் வகுப்பறைகள், குடிநீர் தொட்டிகள், கழிப்பிடம் போன்றவை தூய்மைப்படுத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனிடையே முதன்மை கல்வி அதிகாரிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும். எவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி தற்போது துப்புரவு பணியாளர்களை கொண்டு பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணியில் தலைமையாசிரியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் ஈரோடு மாவட்டத்திலும் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருந்த குடிநீர் தொட்டிகள் கிருமிநாசினி மூலம் சுத்தப் படுத்தப்பட்டன. மாணவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து உட்காரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கிருமி நாசினிகள் வகுப்பறையின் நுழைவாயிலில் வைக்கப்படுகிறது. மாணவ மாணவிகளுக்கு முககவசம் இலவசமாக வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இதுதவிர மாணவர்களுக்கு எதிர்ப்பு சக்தி மற்றும் வைட்டமின் மாத்திரைகளும் வழங்க சுகாதாரத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் குழுவாக கூடி உணவு அருந்துவதை தவிர்த்தல், வளாகங்களில் கூடி நின்று பேசுதல் போன்றவற்றை தவிர்க்க கண்காணிப்பு பணியில் ஆசிரியர்கள் ஈடுபடவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி வளாகத்தில் தேவையற்ற குப்பைகள் முட்புதர்கள் மரக்கிளைகள் ஆகியவை அகற்றப்பட்டு வருகின்றன. நீண்ட நாட்களாக வகுப்பறைகள் மூடப் பட்டிருப்பதால் வகுப்பறையை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுபோல் கல்லூரிகளில் உள்ள வளாகத்திலும் தூய்மைப்படுத்தும் பணி தீவரமாக நடந்து வருகிறது. மேலும் பள்ளி வாகனங்கள் அனைத்தும் பழுது பார்க்கப்பட்டு வருகிறது.

Updated On: 25 Aug 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?