/* */

ஈரோடு: அனுமதியின்றி செயல்பட்ட 5 ஜவுளிக்கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்

ஈரோடு மாநகரில், அனுமதியின்றி செயல்பட்ட 5 ஜவுளிக்கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

HIGHLIGHTS

ஈரோடு: அனுமதியின்றி செயல்பட்ட 5 ஜவுளிக்கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்
X

ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மாநகராட்சி அலுவலர்கள் ஆங்காங்கே சோதனை செய்து முக கவசம் அணியாமல் வருபவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள், அனுமதியின்றி கடையை திறந்து வைத்து வியாபாரத்தில் ஈடுபடுபவர்களைக் கண்காணித்து அபராதம் விதித்து கடைகளைப் பூட்டி சீல் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் அனுமதியின்றி ஜவுளிக்கடையை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்ட 5 கடைகளுக்கு தலா ரூ 5,000 அபராதம் விதித்ததோடு, அந்த 5 கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதேபோல் முகக்கவசம் அணியாமல் வந்த 112 பேருக்கு தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த 3 நாட்களில் மட்டும் முககவசம் அணியாமல் வந்த 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் 9 கடைகளுக்கு ரூ 5,000 அபராதம் விதித்து, இந்த 9 கடைகளுக்கும் பூட்டி சீல் வைக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 22 Jun 2021 1:44 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்