/* */

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: ஈரோடு மாவட்டத்தில் 2,724 பேர் போட்டி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் 771 பதவியிடங்களுக்கு 2,724 பேர் போட்டியிடுகின்றனர்.

HIGHLIGHTS

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: ஈரோடு மாவட்டத்தில் 2,724 பேர் போட்டி
X

பைல் படம்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் வருகிற 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில் 21 மாநகராட்சி உட்பட அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் அடங்கும். இந்நிலையில் இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ஆம் தேதி தொடங்கி 4-ந் தேதி முடிவு பெற்றது. பின்னர், நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் போட்டியிலிருந்து வாபஸ் பெறுவதற்கு 3 மணி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில் போட்டியின்றி தேர்வான 1 வார்டு போக, 59 வார்டுகள், 4 நகராட்சிகளில் உள்ள 102 வார்டுகள், 42 பேரூராட்சிகளில் உள்ள 630 வார்டுகளில் 20 பேர் போட்டியின்றி தேர்வான நிலையில் 610 வார்டுகளுக்கு சின்னத்துடன் வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதில் ஈரோடு மாநகராட்சியில் உள்ள 59 வார்டுகளில் 352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் உள்ள 102 வார்டுகளுக்கு 517 பேர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் 11 பேரது வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 53 பேர் வாபஸ் பெறப்பட்ட நிலையில், 102 வார்டுகளில் 453 பேர் போட்டியிடுகின்றனர்.

மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 42 பேரூராட்சிகளில் உள்ள 630 வார்டுகளில் 20 போக, 610 வார்டுகளில், 1,919 பேர் இறுதிப் போட்டியில் பங்கேற்கிறார்கள். இதையடுத்து நடைபெற உள்ளநகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள 771 வார்டுகளுக்கு 2,724 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கி, இறுதி வேட்பாளர் பட்டியல் ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார்.

Updated On: 8 Feb 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...