/* */

ஈரோடு ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் குறைந்தது

ஈரோடு ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ரூ. 50-ல் இருந்து 10 ஆக குறைந்தது.

HIGHLIGHTS

ஈரோடு ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் குறைந்தது
X

ஈரோடு ரயில் நிலையம்.

கொரோனா தாக்கத்தை குறைக்கும் வகையில் ரயில்வே துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பயணிகள் ரயில்கள் நிறுத்தப்பட்டு சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்கி வந்தன. முன்பதிவு செய்து மட்டுமே பயணிக்கும் முறை கொண்டு வரப்பட்டது. மேலும் முக்கிய நடவடிக்கையாக ரயில் நிலையங்களில் தேவையில்லாமல் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் நடைமேடை கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டது.

இதன்படி ஈரோடு ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் டிக்கெட் முதலில் ரூ.10-க்கு விற்கப்பட்டது. பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதன் காரணமாக பிளாட்பாரம் கட்டணம் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். பிளாட்பாரம் கட்டணத் தொகையை குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக பிளாட்பாரம் கட்டணம் உயர்ந்து காணப்பட்டது.

இந்நிலையில் கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியதால் பழையபடி ரயில்கள் இயங்க தொடங்கியுள்ளது. இதையடுத்து பிளாட்பாரம் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்தது. இந்நிலையில் இந்த கோரிக்கையை ஏற்ற ரயில்வே நிர்வாகம் பிளாட்பாரம் கட்டணத்தை குறைத்தது. இதன்படி மீண்டும் பழைய கட்டணமான ரூ.10 வசூலிக்கப்படும் என அறிவித்தது. இவை உடனடியாக அமலுக்கு வரும் எனவும் அறிவித்தது. அதன்படி ஈரோடு ரயில் நிலையத்தில் இன்று முதல் பிளாட்பாரம் கட்டணம் ரூ.10-க்கு விற்கப்பட்டது. இந்த கட்டண குறைப்புக்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Updated On: 26 Nov 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  4. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  5. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  6. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  7. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  8. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  9. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  10. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...