/* */

அந்தியூரிலிருந்து 2 புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை துவக்கி வைத்த எம்எல்ஏ

அந்தியூர் பேருந்து நிலையத்திலிருந்து 2 புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை எம்எல்ஏ வெங்கடாசலம் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

அந்தியூரிலிருந்து 2 புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை துவக்கி வைத்த எம்எல்ஏ
X

பேருந்து சேவையை துவக்கி வைத்த எம்எல்ஏ வெங்கடாசலம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து, சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி மலைப் பகுதிக்கும், நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கும் புதிய பேருந்து சேவையை துவக்க வேண்டும் என அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ ஜி வெங்கடாசலத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனையடுத்து, மனுவை பெற்றுக் கொண்ட எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், இது‌ தொடர்பாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோரிடம் மனுக்களை வழங்கி வேண்டுகோள் விடுத்தார். இதற்கு செவி மடுத்த முதலமைச்சர் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர், புதிய வழித்தடத்தில் இரண்டு பேருந்துகள் இயங்க அனுமதி அளித்தார்.

இதனையடுத்து, இன்று அந்தியூர் பேருந்து நிலையத்தில் நடந்த நிகழ்வில், அந்தியூரில் இருந்து ஈரோடு, திருச்சி வழியாக வேளாங்கண்ணிக்கும், அத்தாணி , சத்தி வழியாக தாளவாடிக்கும் பேருந்து சேவையினை தொடங்கி வைத்தார். அப்போது, தொமுச மண்டல பொருளாளர் ரங்கநாதன் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பாண்டியம்மாள் மற்றும் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Updated On: 28 Feb 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’