/* */

பவானியில் இட்லி உண்ணும் திருவிழா : 'சாப்பாட்டு ராமன்களுக்கு' பரிசு

நிகழ்ச்சியில் இரண்டு பிரிவாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் நான்கு நபர்களுக்கு பரிசுகளும், கோப்பையும் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

பவானியில் இட்லி உண்ணும் திருவிழா :  சாப்பாட்டு ராமன்களுக்கு பரிசு
X

வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் வழங்கப்படும் காட்சி.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள தோட்டம் தனியார் மண்டபத்தில் பட்டையா கேட்டரிங் சார்பில் இட்லி உன்னும் திருவிழா நடைபெற்றது. விழாவிற்கு பட்டையா கேட்டரிங் நிறுவனர் நடராஜன் தலைமை வகித்தார். முன்னாள் கவுன்சிலர் ரவி முன்னிலை வகித்தார். குமாரபாளையம் சுப்பிரமணி கவிதா டையிங் நிறுவனர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலையில் திரைப்பட நகைச்சுவை நடிகர் வையாபுரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய காவல்துறை துணை கண்காணிப்பாளர் சண்முகம், தற்போது உள்ள சூழலில் இயற்கை விவசாயம்தான் முக்கியம். விவசாயத்திற்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். கடந்த 40 ஆண்டுகளில் நாம் உண்ட உணவுகள் அனைத்தும் விஷமாக மாறி விட்டன. ஏனென்றால் மனிதன் வாழ்வதற்கு முக்கிய தேவையே நல்ல நீர், நல்ல உணவு தான். ஆனால் தற்போது அனைத்து நிலைகளிலும் விஷம் கலந்து உள்ளது.

அதேபோல் உணவிலும் விஷம் கலந்து உள்ளது. இனிவரும் காலங்களிலாவது இதுபோன்ற நீர்களையும், உணவுகளையும் தவிர்க்க வேண்டும். இவை தொடர்ந்தால் நம் சந்ததிகள் வாழும் வாழ்க்கை 40 ஆண்டுகள் முதல் ஐம்பது ஆண்டுகள் மட்டும் தான் ஆயுள் இருக்கும் என்று கூறினார்.

மேலும் எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சிகளில் மரக்கன்றுகள் நினைவாக அனைவருக்கும் வழங்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் இரண்டு பிரிவாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் நான்கு நபர்களுக்கு பரிசுகளும், கோப்பையும் வழங்கப்பட்டது. மொத்தம் இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து 8 நபர்களுக்கு முதல் பரிசு 5ஆயிரமும் இரண்டாம் பரிசு 3 ஆயிரமும் மூன்றாம் பரிசு 2000, நான்காம் பரிசு 1000 ரூபாய் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Nov 2021 9:53 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  4. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  5. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  6. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  8. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  9. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...