/* */

ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் விற்பனைக்கு வந்த 650 மாடுகள்..

Erode Cow Market-வெளிமாநில வியாபாரிகளின் வருகை காரணமாக கூடுதல் எண்ணிக்கையிலான கறவை மாடுகள், கன்றுக்குட்டிகள் விற்பனையாகி உள்ளன.

HIGHLIGHTS

Erode Cow Market
X

Erode Cow Market

Erode Cow Market-ஈரோடு மாட்டுச் சந்தையில் வெளிமாநில வியாபாரிகளின் வருகை காரணமாக கடந்த வாரத்தைவிட கூடுதல் எண்ணிக்கையிலான கறவை மாடுகள், கன்றுக்குட்டிகள் விற்பனையாகி உள்ளன.

ஈரோடு, கருங்கல்பாளையத்தில் காவிரிக்கரை சோதனைச்சாவடி அருகே வாரந்தோறும் புதன், வியாழன் ஆகிய இரு நாள்களில் மாட்டுச் சந்தை நடைபெறுகிறது. அதில், புதன்கிழமை அடி மாடுகளும், வியாழக்கிழமை கறவைப் பசு மாடுகளும், எருமை மாடுகள், வளர்ப்பு கன்றுக்குட்டிகளும் விற்பனை செய்யப்படுகின்றன. இச்சந்தைக்கு , ஈரோடு மட்டுமின்றி நாமக்கல், சேலம், திருப்பூர், திண்டுக்கல், கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்காக மாடுகளைக் கொண்டு வருகின்றனர்.

இவற்றைக் கொள்முதல் செய்ய கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், கோவா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள், தமிழக வியாபாரிகளும் வருகின்றனர். வாரந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனையாகி வருகின்றன.

இந்நிலையில், தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் அம் மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் யாரும் வரவில்லை. மற்ற மாநில வியாபாரிகளும், மாடுகள் வரத்தும் கடந்த வாரத்தைப் போலவே எண்ணிக்கை குறையாமல் இருந்தது. இதனால் சந்தையில் மாடுகள் விற்பனையில் இயல்பு நிலைக்குத் திரும்பியதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, மாட்டுச் சந்தை நிர்வாகிகள் கூறியதாவது: கடும் பனிப்பொழிவு காரணமாக மகாராஷ்டிர வியாபாரிகள் வராத நிலையில், பிற மாநில வியாபாரிகள், விவசாயிகள் வழக்கம்போல் சந்தைக்கு வந்திருந்தனர். இதனால், விற்பனை இயல்பு நிலைக்கு வந்ததால் பெருவாரியான பசு மாடுகள் விற்பனை ஆகியுள்ளன.இதில் 350 பசுமாடுகள், 300 எருமை மாடுகள் என மொத்தம் 650 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. பசு மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் வரையிலும் வளர்ப்புக் கன்றுகள் ரூ. 1,000 முதல் ரூ. 10 ஆயிரம் வரையிலும் விலை போனது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, மராட்டியம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து, விவசாயிகளிடம் நேரடியாக விலை பேசி மாடுகளை பிடித்து சரக்கு வாகனங்களில் ஏற்றி சென்றார்கள்.

இந்த சந்தைக்கு ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், நாமக்கல், சேலம் உள்பட பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்தவாரம் அதிக அளவில் மாடுகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த வாரம் போல 650 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அதில் 70 சதவீத மாடுகள் மட்டுமே விற்பனையானதாக மாட்டுசந்தை வியாபாரிகள் கூறினர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 8 April 2024 3:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  3. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  4. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  5. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  6. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  7. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  8. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  9. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  10. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!