/* */

பவானியை அடுத்த ஜம்பையில் ஒன்றிய அரசை கண்டித்து மா.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

இந்தி மொழியை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஜம்பை பேருந்து நிறுத்தத்தில் மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

பவானியை அடுத்த ஜம்பையில் ஒன்றிய அரசை கண்டித்து மா.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
X

பவானியை அடுத்த ஜம்பை பேருந்து நிறுத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தி மொழியைத் திணிக்க முயலும் ஒன்றிய அரசைக் கண்டித்து பவானியை அடுத்த ஜம்பை பேருந்து நிறுத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பெரியமோளபாளையம் கிளைச் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.

பவானி தாலுகா செயலாளர் எஸ்.மாணிக்கம், தாலுக்கா கமிட்டி உறுப்பினர் எம்.தங்கராசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளர் ஆற்றலரசு, இளம் சிறுத்தைகள் பாசறைச் செயலாளர் பிரேம்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மேலும், அரசு துறைகளில் இணைப்பு மொழி எனும் பெயரில் இந்தியியை திணிக்கக் கூடாது. மாநில மொழி, கலாச்சாரத்தை அழிக்க முயற்சிக்கக் கூடாது.அரசியல் சாசனம் அனுமதித்துள்ள 22 மாநில மொழிகளை அலுவல் மொழியாக செலப்டுபடுத்திடக் கோரி ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது. நிர்வாகிகள் வேலுச்சாமி, சிவன், அன்பு, பெருமாள் உளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 April 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?