/* */

சாலை விபத்தில் சிகிச்சை பெற்ற அந்தியூர் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சாலை விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

சாலை விபத்தில் சிகிச்சை பெற்ற அந்தியூர் கல்லூரி மாணவர் உயிரிழப்பு
X

பைல் படம் 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் உள்ள கரட்டுப்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமியின்இளைய மகன் விக்னேஷ்.கோவையில் உள்ள கல்லூரியில் தங்கி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், விக்னேஷூம், அவருடைய நண்பர் முஹம்மது ரிஸ்வானும் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, கோவை- பொள்ளாச்சி சாலையில் சிப்கோ மேம்பாலம் அருகே டெம்போ மோதி விக்னேஷ் படுகாயம் அடைந்தார்.இதனையடுத்து, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதையடுத்து கடந்த மாதம் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் அவரது பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.இந்நிலையில், விக்னேஷின் உடல்நிலை மோசமானதால் இன்று அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.இதுகுறித்து, பழனிச்சாமி அளித்த புகாரில் பேரில் அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் விக்னேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

Updated On: 13 March 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...