Begin typing your search above and press return to search.
ஈரோடு மாவட்டத்தில் 76 மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் இன்று 76 மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் தொடங்கி, நடைபெற்று வருகிறது.
HIGHLIGHTS

தடுப்பூசி முகாமில், பூஸ்டர் ஊசி செலுத்திக் கொண்ட முதியவர்.
தமிழகம் முழுவதும் முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு விரைவாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த ஏதுவாக, வியாழக்கிழமைதோறும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட, சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அதன்படி இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம், 24 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியானது செலுத்தப்பட உள்ளது. மாவட்டம் முழுவதும் இன்று 76 மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பூசி முகாமில் 5,500 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.