/* */

அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.1.36 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்

Erode news- ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் வாழைத்தார் ரூ.1.36 லட்சத்துக்கு விற்பனையானது.

HIGHLIGHTS

அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.1.36 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
X

Erode news- ஏலத்திற்கு கொண்டு வரப்பட்ட வாழைத்தார்களை படத்தில் காணலாம்.

Erode news, Erode news today- அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் புதன்கிழமை (நேற்று) நடைபெற்ற ஏலத்தில் வாழைத்தார் ரூ.1.36 லட்சத்துக்கு விற்பனையானது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இ-நாம் வாயிலாக வாழைத்தார் மறைமுக ஏலம் புதன்கிழமை (நேற்று) நடந்தது. இந்த ஏலத்தில் விவசாயிகள் மொத்தம் 1,221 வாழைத்தார்களை கொண்டு வந்திருந்தனர். வாழைத்தார் ரகங்கள் அனைத்தும், தனித்தனி ரகமாக ஏலம் நடைபெற்றது.

இதில், செவ்வாழை தார் ரூ.150 முதல் ரூ.360 வரையிலும், தேன்வாழை தார் ரூ.160 முதல் ரூ.380 வரையிலும், ரஸ்தாளி தார் ரூ.225 முதல் ரூ.420 வரையிலும், பூவன் தார் ரூ.150 முதல் ரூ.215 வரையிலும், கதளி கிலோ ரூ.8.50 முதல் ரூ.16.50 வரையிலும், நேந்திரம் கிலோ ரூ.11.50 முதல் ரூ.27 வரையிலும் என‌ மொத்தம் ரூ. 1 லட்சத்து 35 ஆயிரத்து 891 ரூபாய்க்கு வாழைத்தார்கள் ஏலம் போனது.

மேலும், கடந்த வாரத்தை விட இந்த வாரத்தில் வாழைத்தார் வரத்து அதிகமாக இருந்ததாக, ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஞானசேகர் தெரிவித்தார்.

Updated On: 28 March 2024 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  2. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  3. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  4. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  5. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  6. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  7. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  8. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  9. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?
  10. தமிழ்நாடு
    22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு