/* */

அரக்கன்கோட்டை விதை பண்ணைகளில் விதைச்சான்று உதவி இயக்குனர் ஆய்வு

அரக்கன்கோட்டை விதை பண்ணைகளை ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககக்சான்று உதவி இயக்குனர் மோகனசுந்தரம் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

அரக்கன்கோட்டை விதை பண்ணைகளில் விதைச்சான்று  உதவி இயக்குனர் ஆய்வு
X

விதைப்பண்ணையில் ஆய்வு மேற்கொள்ளும் விதைச்சான்று அலுவலர் 

தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன பகுதியில் ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மற்றும் கோவை மாவட்டங்களை சேர்ந்த தனியார், அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் விதைப்பண்ணைகள் அமைத்துள்ளன. இந்த விதை பண்ணைகளை ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககக்சான்று உதவி இயக்குனர் மோகனசுந்தரம் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, விதை உற்பத்தியாளர்கள் இந்த பகுதியில் நெல் ஏ.டி.டி.37, ஏ.எஸ்.டி.16, டி.பி.எஸ்.5, எம்.டி.யு.1010, என்.எல்.ஆர்.34449 ஆகிய ரகங்களின் வல்லுனர் மற்றும் ஆதாரநிலை ஒன்று விதைகளை கொண்டு விதைப்பண்ணைகளை அமைத்துள்ளனர். இந்த விதை பண்ணைகள் தற்போது பூப்பருவம் முதல் அறுவடை நிலை வரை உள்ளது. இந்த விதை பண்ணைகளின் வயல் தரம் ஆய்வு செய்யப்பட்டு சாகுபடியாளர்களுக்கு பயிர் பாதுகாப்பு மற்றும் அறுவடை தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டதுஎன்று கூறினார் .

மேலும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நெல் ரகங்களான ஏ.எஸ்.டி.21, கோ.54, கோ.55 மற்றும் ஏ.டி.டி.57 ஆகிய ரகங்களின் உண்மைநிலை மாதிரி விதைப்பண்ணைகளும் ஆய்வு செய்யப்பட்டு, ஈரோடு மாவட்ட விதைச்சான்று அலுவலர்கள் மற்றும் கோபி உதவி விதை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On: 20 Aug 2023 4:54 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  3. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  4. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  6. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  8. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி
  9. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  10. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு