/* */

ஈரோட்டில் சாலையோர பழக்கடைகளில் 75 கிலோ தரமில்லாத மாம்பழங்கள் பறிமுதல்

Erode news, Erode news today- ஈரோட்டில் உள்ள சாலையோர பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில், 75 கிலோ தரமில்லாத மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

ஈரோட்டில் சாலையோர பழக்கடைகளில் 75 கிலோ தரமில்லாத மாம்பழங்கள் பறிமுதல்
X

Erode news, Erode news today- தரமில்லாத மாம்பழங்களை அழித்த  உணவு பாதுகாப்பு அதிகாரிகள்.

Erode news, Erode news today- ஈரோட்டில் உள்ள பழக்கடைகளில் தரம் இல்லாத மாம்பழங்கள் மற்றும் பழ வகைகள் விற்கப்படுவதாக பொதுமக்களிடையே தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதைத்தொடர்ந்து, ஈரோடு சாலையோர பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, கடைகளில் வைக்கப்பட்டிருந்த இந்த பழங்கள் இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டதா? என்று மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அதிகாரி தங்கவிக்னேஷ் தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். 20-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மாம்பழம், வாழை உள்ளிட்ட பழங்களை அதிகாரிகள் கையில் எடுத்து பார்வையிட்டனர்.

இந்த சோதனையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களும், சாப்பிடுவதற்கு தகுதி இல்லாத அழுகிய நிலையில் பழங்களும் விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அழுகிய நிலையில் இருந்த 50 கிலோ மாம்பழங்களையும், செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 25 கிலோ மாம்பழங்களையும் பறிமுதல் செய்து அவற்றை அழித்தனர்.

மேலும், கடைக்காரர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு வழங்கப்பட்டது. 3 கடைகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். எனவே தரமில்லாத பழங்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். இந்த சோதனையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம் மற்றும் அருண் குமார் மற்றும் எத்திகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 5 July 2023 5:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...