/* */

ஈரோடு தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 64.50 சதவீதம் வாக்குப்பதிவு

Erode news- ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 64.50 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

HIGHLIGHTS

ஈரோடு தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 64.50 சதவீதம் வாக்குப்பதிவு
X

Erode news- நாடாளுமன்றத் தேர்தல் 2024.

Erode news, Erode news today- ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 64.50 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மிக அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே பொதுமக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்நிலையில், ஈரோடு தொகுதி முழுவதும் இதுவரை பதிவாகியுள்ள வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 9 மணி நிலவரப்படி 13.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, 11 மணி நிலவரப்படி 25.37 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

மதியம் 1 நிலவரப்படி ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் 42.23 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத வாக்குகளும், மாலை 5 மணி வரை 64.50 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளது.

இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையவிருக்கிறது. கடைசி நிமிடங்களில் வருவோருக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு அவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 19 April 2024 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?