Begin typing your search above and press return to search.
ஒட்டன்சத்திரத்தில் மாயமான 3 சிறுமிகள்; சென்னையில் மீட்ட போலீசார்
ஒட்டன்சத்திரத்தில் காணாமல்போன 3 சிறுமிகளை போலீசார் சென்னையில் மீட்டு திண்டுக்கல் அழைத்துவந்தனர்.
HIGHLIGHTS

சென்னையில் மீட்கப்பட்ட சிறுமிகள்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் நேற்று முன்தினம் இரவு 3 பெண் குழந்தைகள் காணாமல் போனதாக பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து ஒட்டன்சத்திரத்தில் இருந்து திண்டுக்கல் சாலைகளில் உள்ள சிசிடிவி கேமிரா மூலம் மூன்று பெண் குழந்தைகள் சென்னை சென்றது தெரியவந்தது.
உடனடியாக சென்னை விரைந்த காவல்துறையினர் நேற்று அதிகாலை சென்னை கோயம்பேட்டில் மூன்று சிறுமிகளை போலீசார் மீட்டனர்.
பின்னர், குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் இருந்த வர்ஷினி, பிரதிபா, ரக்ஷனா ஆகியோரை சத்திரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா தலைமையிலான போலீசார் பத்திரமாக மீட்டு திண்டுக்கல் அழைத்துவந்தனர்.