/* */

படபிடிப்பு தளத்தில் நடிகர் சேரனுக்கு தலையில் பலத்த அடி

படபிடிப்பு தளத்தில் நடிகர் சேரன் தலையில் அடிபட்டு ரத்தம் சொட்ட சொட்ட தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

HIGHLIGHTS

படபிடிப்பு தளத்தில் நடிகர் சேரனுக்கு தலையில் பலத்த அடி
X

தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லபட்ட நடிகர் சேரன்.

திண்டுக்கல்லில் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை நந்தா பெரியசாமி இயக்குகிறார். ரெங்கநாதன் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர்கள் சேரன், மல்லூரி கௌதம் கார்த்திக் உட்பட நடிகர் பட்டாளமே நடித்து வருகின்றனர். திண்டுக்கல் மின்சார வாரியத்துக்கு பின்னால் உள்ள அங்குவிலாஸ் குடும்பத்துக்குச் சொந்தமான இடத்தில் இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் ஆனந்தம் விளையாடும் வீட்டின் கட்டடத்தை சுற்றி பார்க்கும் காட்சியில் நடிகர் சேரன் நடித்துக் கொண்டிருக்கும்போது கால் இடறி கீழே விழுந்து தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று 8 தையல்கள் அவர் தலையில் போடப்பட்டது. பின்பு அவர் வலியை பொருட்படுத்தாமல் தனக்குள்ள காட்சியில் நடித்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சேரனின் மன ஆற்றலை நடிகர்களும், படக்குழுவினரும் பாராட்டியுள்ளனர். மேலும் படக் குழுவில் பெரும்பாலான ஊழியர்கள் முககவசம் அணியாமலும், தனிநபர் இடைவெளி இல்லாமலும், கிருமி நாசினியை சரிவர பயன்படுத்தாமல் படப்பிடிப்பு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், படப்பிடிப்பு தளத்தில் போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் படபிடிப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

Updated On: 5 Aug 2021 9:25 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  2. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  3. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  5. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  6. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  7. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  8. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  9. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  10. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!