/* */

தர்மபுரியில் நாளை மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்; பொறுப்பாளர் அறிவிப்பு

தர்மபுரியில் நாளை மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என மாவட்ட கழக பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தர்மபுரியில் நாளை மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்; பொறுப்பாளர் அறிவிப்பு
X

மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பிஎன்பி இன்பசேகரன்.

தர்மபுரியில் நாளை மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என பொறுப்பாளர் பிஎன்பி இன்பசேகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழு ஆலோசனை கூட்டம், தர்மபுரியில் உள்ள மாவட்ட கட்சி அலுவலக கூட்டரங்கில் நாளை ( 2-ம் தேதி) காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு நான் தலைமை வைக்கிறேன். கட்சியின் முன்னணி நிர்வாகிகள் முன்னிலை வைக்கிறார்கள். ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தர்மபுரி மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை துவக்கி வைக்கவும், ஆய்வு செய்யவும் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகை தரும் முதல்வருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிப்பது குறித்தும், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 3-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

மேலும், வரும் உள்ளாட்சி மன்ற தேர்தல் பணிகள் குறித்தும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. கட்சியின் முன்னாள் இன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Updated On: 1 Aug 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’