/* */

இளைஞர் தற்கொலை: பிரேதப்பரிசோதனை தாமதத்தால் உறவினர்கள் சாலை மறியல்

அரூரில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், பிரேத பரிசோதனைக்கு தாமதம் ஏற்பட்டதால், உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

இளைஞர் தற்கொலை: பிரேதப்பரிசோதனை தாமதத்தால் உறவினர்கள் சாலை மறியல்
X

அரூரில், இளைஞர் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்.

தர்மபுரி மாவட்டம் அரூர் ஆத்தோர வீதியைச் சேர்ந்த சேரன் மகன் ரீகன் என்பவர் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், ரீகன் உடலை பிரேத பரிசோதனைக்காக இரவு 10.30 மணிக்கு அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காலையில் இருந்து பிற்பகல் வரை, உடலை பிரேத பரிசோதனை செய்து கொடுப்பதில் காலதாமதம் செய்வதாகவும், பலமுறை தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி உறவினர்கள், அரூர் அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து மொரப்பூர் - தர்மபுரி நெடுஞ்சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேசி, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியலின் காரணமாக மொரப்பூர் தர்மபுரி நெடுஞ்சாலையில், சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Updated On: 26 July 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’