/* */

சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

49 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 39 அடி அளவு உயர்ந்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
X

சின்னாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளதால் தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட 13 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி, பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல் ஆகிய பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் மாலையில் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் கனமழையாக பெய்ய தொடங்கி விடிய, விடிய பெய்தது.

இதைத்தொடர்ந்து பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி சின்னாறு அனணயின் நீர்வரத்து பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டம் எல்லை பகுதியான தளி, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை மற்றும் பஞ்சப்பள்ளி உள்ளிட்ட காப்புக்காடு பகுதிகளிலும் தொடர் கனமழை காரணமாக இன்று காலை திடீரென நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

இதனால் சின்னாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு கரைபுரண்டு ஓடியது. சின்னாற்றில் வெள்ள பெருக்கு காரணமாக பாலக்கோட்டில் உள்ள பஞ்சப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. 49 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 39 அடி அளவு உயர்ந்துள்ளது.

சின்னாறு செல்லும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆத்துக்கொட்டாய், கரகூர், அத்திமுட்லு, மாரண்டஅள்ளி. பஞ்சப்பள்ளி, சாமனூர், தொல்லகாது உள்ளிட்ட பகுதிகளில் ஆறு செல்லும் வழித்தடங்களில் வெள்ள பெருக்கெடுத்து ஓடுவதால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 8 Dec 2023 1:54 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...