/* */

தருமபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்கம்

தருமபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

தருமபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்கம்
X

தர்மபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் நாள் தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டம் மாபெரும் போராட்டம் ஆகும். அந்தப் போராட்டத்தில் தங்களின் இன்னுயிரை நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு தர்மபுரி மாவட்ட மாணவர் அணி சார்பில் நடைபெறும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தர்மபுரி மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் உயர்க்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சருமான கே.பி. அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் தருமபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு மாலை அணிவித்து மலர்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பின்னா் உயிா்நீத்த தியாகிகளுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவா் தொ.மு.நாகராஜன் அரூா் சட்டமன்ற உறுப்பினா் சம்பத்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதேபோன்று திமுக கட்சி அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி, தர்மபுரி பெரியார் சிலை அருகே அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன் தலைமையில் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On: 25 Jan 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?