/* */

தர்மபுரி மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நாளை வருகை: கலெக்டர் தகவல்

தமிழக முதல்வர் ஸ்டாலின், தர்மபுரி மாவட்டத்தில் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நாளை வருகை: கலெக்டர் தகவல்
X

கலெக்டர் திவ்யதர்ஷினி

இது தொடர்பாக, கலெக்டர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை (30.09.2021) வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையம் புதிய கட்டடம் மற்றும் இதர துறைகளின் சார்பில் முடிவுற்ற புதிய கட்டடங்களையும் திறந்து வைக்கிறார்.

தர்மபுரி மாவட்டத்தில், 100 % கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்காக ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு விருதுளையும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் வழங்க உள்ளார். அதனை தொடர்ந்து, ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

மாலையில், தர்மபுரி மாவட்டம், வத்தல் மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், மலைவாழ் மக்கள் மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடி, பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 29 Sep 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்