/* */

தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்

தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்
X

தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி.

தர்மபுரி மாவட்டத்தில் கிராமப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நாட்டினக் கோழிகளுக்கும் மற்ற கோழிகளுக்கும் கோடைக் காலங்களில் வெள்ளைக் கழிச்சல் நோய் ஏற்பட்டு இறப்பு ஏற்படுகின்றது.

கோழிகளுக்கு ஏற்படும் வெள்ளைக்கழிச்சல் நோயினை கட்டுப்படுத்த கால்நடை பராமரிப்புத்துறை மூலம் வாரத்திற்கு ஒரு முறை கால்நடை மருந்தகங்களிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை கால்நடை மருத்துவ கிளை நிலையங்களிலும் மற்றும் கால்நடை பாதுகாப்புத்திட்ட முகாம்களிலும் வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இருப்பினும் கோடைக்காலத்தில் வெள்ளைக்கழிச்சல் நோய் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு முன்னெச்சரிக்கையாக இலவசமாக வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன.

அதன்படி, அனைத்து கிராமங்களிலும் 01.02.2022 முதல் 14.02.2022 முடிய கால்நடை பராமரிப்புத்துறையில் பணிபுரியும் கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் மூலம் மாலை நேரங்களில் தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய் ஏற்படுவதை தடுப்பதற்காக தருமபுரி மாவட்டத்திற்கு 1.55 இலட்சம் டோஸ்கள் RDVK தடுப்பூசி மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து விவசாயப் பெருங்குடி மக்களும் மற்றும் கோழிகள் வளர்ப்போர்களும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசிப் போட்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

Updated On: 29 Jan 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்