/* */

சாதாரண மழைக்கே தாக்குப்பிடிக்காத பைபாஸ் ரோடு: வாகன ஓட்டிகள் பெரும்பாடு

தர்மபுரியில், சாதாரண மழைக்கே பைபாஸ் ரோடு தாக்குப்பிடிக்காமல், அப்பகுதி முழுவதும் சாக்கடைத் தண்ணீர் தேங்கி, அவதியாக உள்ளது.

HIGHLIGHTS

சாதாரண மழைக்கே தாக்குப்பிடிக்காத பைபாஸ் ரோடு: வாகன ஓட்டிகள் பெரும்பாடு
X

சாதாரண மழைக்கே, தருமபுரியில்  பைபாஸ் ரோடு தங்கம் மருத்துவமனை முதல் 4ரோடு வரை, ஆங்காங்கே  சாக்கடைத் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

தர்மபுரி நகரப்பகுதியில், புதன்கிழமை இரவு சுமார் 20 நிமிடம் மழை பெய்தது. திடீர் மழையின் காரணமாக தருமபுரி தங்கம் மருத்துவமனை முதல் 4ரோடு வரை ஆங்காங்கு சாலையில் மழை நீரும் சாக்கடைத் தண்ணீரும் கலந்து தேங்கி நின்றது. மழைத்தண்ணீர் வெளியேற வழி இல்லாததால், சாலையிலேயே தேங்கி நின்ற தண்ணீரிலேயே வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டி சென்றனர்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் கால்வாய்கள் மற்றும் சாக்கடை கால்வாய்களை தூர்வார வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவு பிறப்பித்திருந்தார். தர்மபுரி நகராட்சியில் உள்ள கழிவுநீர் கால்வாய் மற்றும் மழைநீர் கால்வாய்கள் முறையாக தூர்வார படாததால், தண்ணீர் செல்ல வழியின்றி சாலையில் தண்ணீர் வழிந்தோடி வருகிறது.

வழிந்தோடும் தண்ணீரில் சிலர் மேடு பள்ளம் தெரியாததால் வாகனத்தோடு சாலையில் கீழே விழும் அவலம் உண்டாகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சாலையில் மழைநீர் மற்றும் கழிவு நீர் தேங்காமல் வடிகால் அமைத்து தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 21 Oct 2021 1:42 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  5. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  6. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  7. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  8. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...